கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன் | karuppasamy kanavil vanthal enna palan tamil.
கருப்பசாமி கனவில் வந்தால்:
கனவில் கருப்பு அல்லது ஒளி உருவத்திலும் மற்றும் குதிரை உருவத்திலும் அருவாள் மற்றும் ஆயுதத்துடன் கருப்பு உருவத்தில் வந்தால் அது கருப்பசாமியின் என்று கூறப்படுகிறது. கருப்பசாமி மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வம்.கருப்பசாமி கனவில் வந்தால் அது நமது வாழ்க்கையில் தைரியம் வெற்றி தன்னம்பிக்கையும் கொடுக்கும்.
தொழில் வழக்கு அல்லது குடும்ப கோட் வழக்கு இருந்தால் நல்ல உண்மையான நிதி ஒன்று கிடைக்கும். உண்மை நீதி பாதுகாப்பு அனைத்தும் கருப்பசாமிக்கு அழைக்கப்படும். கருப்பசாமி என்பது குலதெய்வம் என்று அழைக்கப்படும்.
கருப்பசாமி நம்ம வீட்டுக்கு வராங்கனா :
கருப்பு உருவத்தில் நாய் ஒன்று நமது வீட்டில் எதிரில் ஒக்காந்திருக்கும் அல்லது வீட்டுக்கு முன் வந்து நாய் நிற்கிறது இது முதல் அறிகுறி.இரண்டாவது கருப்பு உருவப் பள்ளி அல்லது வேற ஒரு பள்ளி நமது வீட்டு நிலவாசலில் நின்னு கெவுளி அல்லது பள்ளி சத்தமிடுதல்
மூன்றாவது மிக முக்கியமானது குதிரை சத்தம் கேட்கிறது அல்லது சாட்டை சத்தம் கேட்கிறது பெரிய பெரிய அருவாள்கள் கனவில் வருவது இதெல்லாம் உங்க வீட்டுக்கு கருப்பசாமி காவலா இருப்பேன் என்று கூறுகிறது .நீங்கள் எதுக்கும் பயப்படத் தேவையில்லை தைரியமாக இருங்கள் என்று கருப்பசாமி கூறுகிறது.கருப்பசாமி உங்க வீட்டுக்கு காவலாக இருக்கிறேனா நீங்கள் அவரோட பிள்ளையாக உங்களை நினைக்கின்றன.
கனவில் கருப்பசாமி வந்து ஆடுவது போல் கனவு கண்டால்:
நீங்க செய்கின்ற தொழில் அல்லது வேலை இடத்தில் சற்று கவனம் தேவை மற்றும் ஒரு முறை இரு முறை யோசித்து சிந்தித்து செயல்பட வேண்டும்.
கருப்பசாமி மனித உருவத்தில் காட்சியளித்து கனவு கண்டால்:
நீ என்னை வணங்க வரவேண்டும் என்று கருப்பசாமி உங்களை அழைக்கிறார் மற்றும் சிலருக்கு கனவில் கருப்பசாமி கோவில் அல்லது அருவாள் மற்றும் கருப்பசாமியின் சிலைகள் இது போன்ற கனவு உங்களுக்கு வந்தால் உங்கள் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
நீ என் எல்லையில் வந்து நிற்க வேண்டும் என்று எனக்கான வேண்டுதலை நீ நிறைவேற்ற வேண்டும் என்று உணர்த்துகிறது இது மட்டுமில்லாமல் நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் உங்களுக்கு காவலாக இருப்பேன் என்று கருப்பசாமியும் மற்றும் உங்கள் குலதெய்வம் காவலாக இருப்பேன் என்று பல உருவத்தில் வந்து உணர்த்தும்.
கருப்பசாமி உங்களுக்கு காவலாக இருப்பேன் என்று உணர்த்தும் பல அறிகுறிகள் பலன்கள்:
நீங்கள் பல கஷ்டங்களிலும் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் இருந்து பள்ளி சத்தம் கேட்டால் கருப்பசாமி உனக்கு நான் இருக்கிறேன் நீ கவலை பட வேண்டாம் இன்று உணர்த்தும் அறிகுறிகள். பள்ளி சத்தம் உனக்கு நான் காவலாக இருப்பேன் என்று கூறுகிறது.
கனவில் அருவாள் அல்லது வேல் போன்ற பொருட்கள் கனவில் கண்டால்:
உனக்கு நான் காவலாக இருப்பேன் என்னோட வேண்டுதலை நீ நிறைவேற்ற வேண்டும் என்று உணர்த்துகிறது ஒரு சில பேர் வேண்டுதல் வச்சிருப்பாங்கள் கருப்பசாமிக்கு அருவா வாங்கி வைப்பது போன்ற வேண்டுதல் வைத்திருப்பார்கள் அது நீங்க மறந்திருக்கலாம் அதை ஞாபகப்படுத்துவதற்காக தான் கனவில் அருவாள் மற்றும் ஆயுதப் பொருட்கள் நம்ம தெய்வம் அழைக்கிறது
நீங்கள் உங்கள் குலதெய்வ எல்லைக்கு குடும்பத்துடன் சென்று உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும். இதுபோன்று செய்தல் கருப்பர் மகிழ்ச்சி அடைவார் அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தாருக்கும் எப்போதும் காவலாக இருப்பார்.

இந்த இரண்டு உயிரினங்கள் உங்கள் கனவில் வந்தால் கருப்பசாமி உங்களிடம் இருக்கிறார்கள்:
முதலில் உங்கள் கனவில் எறும்புகள் கூட்டமாகவும் அல்லது தனியாகவும் வந்தால் உங்கள் தொழில் சார்ந்த ஏதோ பிரச்சனை இருந்தால் முடிவுக்கு வரப்போகுது .உன் உழைப்புக்கான மதிப்பும் கிடைக்கப் போகின்றது உனக்கு நான் காவலாக இருப்பேன் என்று கருப்பசாமி கூறுகிறது மற்றும் உன்னை சார்ந்து இருந்த அனைத்து பிரச்சனைகளும் கூடிய சீக்கிரத்தில் சரியாகப் போகிறேன் என்று உணர்த்துகின்றது .
உங்கள் கனவில் எறும்புகள் வந்தால் நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தால் உங்கள் தொழிலில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கி உங்களுக்கு லாபத்தை உண்டாக்கும் என்று உணர்த்துகிறது.
இரண்டாவது காளை மாடு இது பொதுவாக சிவனும் மற்றும் நந்தீஸ்வரனை குறிக்கிறது. உங்கள் கனவில் காளை மாடு கனவில் வந்தால் செல்வம் அதிகரிக்கும் வெற்றியும் கிடைக்கும் கருப்பசாமியின் காவல் நமக்கு இருக்கிறது என்று உணர்த்தும் கட்டாயமாக இந்த இரண்டு உயிரினங்கள் கனவில் வந்தால் பயப்படத் தேவையில்லை கருப்பசாமி உங்க காவலாக இருக்கிறார்கள்.
குலதெய்வங்கள் மற்றும் கருப்பசாமி காவலாக இருப்பேன் என்று கூறும் அறிகுறிகள்:
இது மட்டுமல்லாமல் நீங்கள் பூஜை அறையில் கடவுள்ட்டில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது
பள்ளியின் சத்தம் கேக்குதல் அல்லது சாமி படத்தில் இருந்து பூ கீழே விழுதல் அல்லது மங்களப் பொருட்கள் உங்களைத் தேடி வருவது இதை அனைத்தும் குலதெய்வம் உனக்காக நான் இருக்கிறேன் என்று உணர்த்தும்.
உங்களுக்கு குலதெய்வம் காவலாக இருப்பேன் என்று பல ரூபங்களில் உங்களுக்கு வந்து கூறுகிறது நீங்கள் ஒரு முறை மனதளவில் உங்கள் குலதெய்வத்தை நீங்க நினைத்தால் போதும் உங்களுக்காக உயிர் கொடுக்கும் தெய்வம் குலதெய்வம் என்று உணர்த்தும்.
கருப்பசாமி களின் மிக சிறப்பான பலன் :
தன்னை வேண்டுகின்ற காக்கும் தெய்வமாகும் மற்றும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாகவும் இருக்கிறார்.
எந்த வகையான காத்து கற்பு நம்மளை அண்ட விடாமல் வழிநடத்தும் காக்கும் கருப்பு சாமி. இவரை கருப்பசாமி கும்பிடுறவங்க சாமிக்கு சுருட்டும் சாராயமும் கருப்புக்கு படையிலாக வைத்து வழிபடுகின்றார்கள் . மொத்தம் 108 கருப்பு சாமி இருக்கிறார்கள் வாத்தியார் தோட்ட கருப்பசாமி சங்கிலி கருப்பு காங்கேயம் கருப்பசாமி பதினெட்டாம் கருப்பு வேட்டை கருப்பு சின்ன கருப்பு என்று பல வகையில் கருப்புசாமி உள்ளார்
கருப்புசாமி நமது முன்னாள் வாழ்ந்த மூத்தவர் அனைத்தும் அவர்கிட்ட கூறி சம்மதம் பட்டு உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.