இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | iranthavargal kanavil vanthal enna palan

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | iranthavargal kanavil vanthal enna palan

மனிதனின் வாழ்க்கையில் இரவில் கனவு வருது இயல்பான ஒன்றுதான். பொதுவாக இறந்தவர்கள் கனவில் வந்தவர்கள் நமக்கு மிகவும் பிடித்தவர் மற்றும் நமக்கு நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் நமக்கு தொடர்புடைய சிலர் இறந்து விட்டால் நமது கனவில் அவர்களின் அது உருவங்களும் மற்றும் அவர்களின் தோற்றமும் வருவது இயல்பான ஒன்றுதான்.

அவ்வாறு இறந்தவர்கள் நமது கனவில் வருவதும் மூலம் என்ன பலன் மற்றும் அர்த்தம் என்ன கூறுகிறது என்று தெளிவாக பார்க்கப் போகிறோம்.

இறந்து போன தாய் தந்தை கனவில் வந்தால்:

தாய் தந்தை இறந்தவர்கள் கனவில் வந்து ஏதோ ஒரு பொருள் கொடுப்பது அது கிப்டோ அல்லது ஏதோ ஒரு துணியோ நகையோ பணமோ குடுப்பது போல் கனவு கண்டால் நன்மைதான் சுப காரியங்களும் நடைபெறும் திருமணமும் தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எதிரிகள் தொல்லை நீங்கும் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.அவர்கள் கனவில் வந்தால் ஆபத்தை முன்கூட்டியே எச்சரிக்கிறார்கள் என்று அர்த்தம்.

இறந்தவர்கள் கனவில் வந்து அழுதல் போல் கனவு கண்டால்:

முதலில் அவர்களுக்கு செய்ய வேண்டிய திதிமுறைகளை செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் அல்லது குடும்பத்தினர்கள் கனவில் வந்து அழுக கூடாது. ஏனென்றால் நமக்கு ஏதோ ஒரு பிரச்சனைகள் ஏற்பட போகுது என்று முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு திதிமுறைகள் ஏதோ செய்யாமல் இருந்தால் கூட அவர்கள் வருவார்கள் அதற்கு கோயிலுக்கு போய் வழிபாடு செய்தால் நன்மை.

இறந்தவர்கள் கனவில் வந்தால்:

நமக்கு வேண்டப்பட்டவர் யாரா இருந்து விட்டால் அவர்கள் கனவில் வந்தால் நமது துன்பங்கள் அனைத்தும் விலகப் போகுது என்று அர்த்தம்.

இயற்கையால் மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால்:

இயற்கை மரணம் அடைந்தார் என்றால் வயதானவர்களும் பேரன் பேத்தி பார்த்த ரொம்ப நாள் ஆயுள் காலம் இருந்து பிறகு இருந்தவர்கள். இவர்கள் வந்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

அதுவே தூர் மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால்:

இவர்கள் அல்பாயிசம் அல்லது அவர்களாக வாழ்க்கையை அவர்களாகவே முடித்துக் கொள்வார்கள் அது தற்கொலை பிரச்சனையோடு இறந்து போனவர்கள் கனவில் வந்தால் ஆபத்து நமக்கு விபத்து அல்லது சண்டை ஏற்படலாம் நமக்கு உடல் நல சரியில்லாமல் போகலாம் இதற்கு பரிகாரம் என்றால் கோவில் செலுத்தல் அல்லது தெய்வ வழிபாடு பண்றது நல்லது.

தாங்களே இறந்தது போல் கனவு கண்டால்:

இதற்கு நீங்கள் பயப்பட தேவையில்லை ஆயில் வாழ்க்கை மேலும் விருத்திப்படும் ஆயுள் அதிகமாகும் எந்த வகையான பிரச்சனையும் இல்லாமல் வாழலாம்.

இறந்தவர்கள் நமது வீட்டில் உறங்குவது போல் கனவு கண்டால்:

அது நமது முன்னோர்களோ இல்லை தாத்தா பாட்டி தாய் தந்தையோ அவர்கள் நமது வீட்டில் தூங்குவது போல் கனவு கண்டால். நீங்கள் ஆபத்திலிருந்து தப்பி விட்டீர்கள் என்று அர்த்தம் அவர்கள் உங்களைப் பெரிய கண்டத்தில் இருந்து காப்பாற்றுகிறார்கள் மேலும் அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்குது என்று அர்த்தம்.

இறந்தவர்கள் உங்களை பேரை கூப்பிடுவது அல்லது அழைப்பது போல் கனவு கண்டால்:

விரைவில் உங்களுக்கு சுபச் செய்திகள் வரும் என்று பொருள் அவர்களின் மனதில் அன்பு இடத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இறந்தவர்கள் திரும்பவும் இறந்தது போல் கனவு கண்டால்:

இதற்கு அவர்களின் ஆத்மா சாந்தி அடையவில்லை என்று அர்த்தம் அவர்களுக்கு செய்ய வேண்டிய திதி காரியங்கள் செய்யாமல் இருந்தால் இப்படிப்பட்ட கனவு கொடு வரும் எதற்கு அப்புறம் அந்தக் காரியங்களை நீங்கள் செய்து விட்டால் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

இறந்தவர்கள் கனவில் வந்த பிறகு செய்ய வேண்டிய முக்கியமான காரியங்கள்:

குலதெய்வ வழிப்பாட்டு மேற்கொள்ளலாம் நமது குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்தில் இருக்கிற அனைவரும் சென்று குலதெய்வத்தை வேண்டி பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கினால் தேவையற்ற கனவுகள் நீங்கும் என்று உண்மை நமது உடல் நலமும் தொழிலும் நன்மை ஏற்படும்.மேலும் நம் முன்னோர்கள் அல்லது வயதானவர்கள் கனவில் வந்தால் எந்த வகையான பயப்பட தேவையில்லை.

Leave a Comment