வலது கண் துடித்தால் என்ன பலன் | valathu kan thudithal enna palan tamil.

வலது கண் துடித்தால் என்ன பலன் | valathu kan thudithal enna palan tamil.

கண் துடித்தால் என்ன பலன்: 

எந்தக் கண் துடித்தால் என்ன பலன் மற்றும் அதன் அர்த்தம். பொதுவாக மனிதர்களுக்கு கண் துடிப்பது என்றால் இயல்பான ஒன்றுதான் இதழில் இயற்கையும் ஆன்மீகத்தையும் சாஸ்திர நம்பிக்கை பலன்களை விரிவாக படித்து நாம் தெரிந்து கொள்ளலாம். கண் துடிப்பது மூலம் முக்கியமான அறிகுறையை நம் முன்கூட்டியே அறியலாம். அது நல்லதா கெட்டதா தெரிந்துக்க முடியும் ஆண்களுக்கு வலது கண், இடது கண் துடித்தால் என்ன பலன் மற்றும் பெண்களுக்கு வலது கண் இடது  கண் துடித்தால் என்ன பலன் என்று விரிவாக இதுல பார்க்கலாம்.

வலது கண் மற்றும் புருவம் துடித்தால் என்ன பலன்:

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்ல காரியம் நடக்கும் எதிர்பாராத சந்தோசம் வரும்.அதுவே இடது கண் துடித்தால் சற்று கவனம் தேவை.

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்ல செய்தி வரும்: 

பண வரவு அதிகரிக்கும் மற்றும் தொழில் மேலும்   முன்னேற்ற அடையும். பதவியோ அல்லது புகழ் கிடைக்கும். தொழிலில் வெற்றி பெறலாம் மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.பிரியமானவர்களை மற்றும் புதிய நண்பர்களை மனதுக்குப் பிடித்தவர்களை நாம் யாரையோ சந்திப்போம்.

ஆண்களுக்கு இடது கண் துடித்தால்: 

சற்று கவனம் தேவை தொழிலிலும் மற்றும் வேலையிலும் கவனம் வைத்து செயல்படவும். மனைவியை பிரிய சூழ்நிலை உண்டாக்கும் எதிர்பாராத ஆபத்தை வரும் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது என்று இடது கண் துடிப்பது மூலம் நாம் அறியலாம்.

கண்ணின் நடு பாகம் துடித்தால்:

நடு பாகம் துடித்தால் கணவன் மனைவியும் பிரியக்கூடிய சூழ்நிலை உண்டாக்கும் மற்றும் சில தேவையில்லாத பிரச்சனைகளை  கணவன் மனைவியின் வாழ்க்கையில் நடைபெறும்.

பெண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன பலன்: 

இடது கண் துடித்தால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்  மற்றும் கடன் பிரச்சினை நீங்கும் மற்றும்  வருமானம் கூடும் இந்த மாதிரி செயல்கள் நடைபெற போகுது என்று முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன பலன்: 

அவர்களுக்கு கெட்ட சகுனத்தை குறிக்குது.அவர்களின் கோபம் அதிகரிக்கும் உடல்நல பிரச்சனைகள் உண்டாகும்.  கடன் செலவு அதிகரிக்கும் மற்றும் தேவையில்லாத செலவுகள் உண்டாக்கும்.

கண்கள் தேவை இல்லாமல் அதிக நேரம் துடித்தால்: 

கண்களுக்கு ஓய்வு அவசியம் மற்றும் கண்கள் ரொம்ப முக்கியமானது சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு கண்களில் ஏதோ தொந்தரவு இருந்தால் உடனடியாக மருத்துவரை  ஆலோசனை பெறவும் நல்லது.

அறிவியல் காரணம் கண் துடித்தால்: 

அதிக சோர்வு மன அழுத்தம் அயர்ன் சத்து குறைபாடு இதன் மூலம் கண் துடிக்கும் என்று அறிவியல் மூலம் கருதப்படுகிறது.

Leave a Comment