பசுமாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பசுமாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் | pasumaadu thuraththuvathu pol kanavu kandaal in tamil

பசுமாடுகள் கனவில் வந்தால் பல பலன்கள் உண்டு. பசுக்கள் பல தொடக்கங்களில் முதலாகவே பசுப் வலிப்படுத்துகிறார்கள். பசுமாடு கனவில் வந்தால் அது நல்ல கணவா இல்ல கெட்ட கனவா என்று நாம் இதில் முன்கூட்டியே அறியலாம் மற்றும் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பசு மாடுகள் கனவில் வந்தால்:

எதிர்கால செயல்கள் முன்னேற்றம் கொண்டுவரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

பசுமாடுகள் துரத்துவது போல் கனவு கண்டால்:

நீங்கள் செய்யும் தொழில் அல்லது வேலை இருந்தால் மிக கவனம் வைத்து செயல்பட வேண்டும். தொழிலில் எதிர்பார்த்து உதவிகள் கிடைக்க காலதாமங்கள் ஆகும் மற்றும் உறவினர்களிடமிருந்து தேவை இல்லாமல் பிரச்சனைகள் உண்டாகும்.

கருப்பு நிறம் கொண்ட பசுவை கனவில் கண்டால்:

இது ஒரு கெட்ட கனவு வரப்போற தொந்தரவையும் பிரச்சனைகளையும் வரும் என்று முன்கூட்டியே குறிக்கிறது. சிறிது கவனம் வைத்து செயல்பட வேண்டும் ஒரு சில துன்பம் வரும் என்று அறியலாம்.

வெள்ளை நிறை  பசுவை பார்ப்பது போல் கனவு கண்டால்:

வரப்போற நல்ல செய்திகளை அறிவுறுத்துகிறது கனவு காண்கிறவர்களின் அவர்களின் விருப்பம் ஆசைகளும் நிறைவேற போகிறது என்று அறியலாம்.

பசுமாடு புதிதாக வாங்குவது போல் கனவு கண்டால்:

உங்கள் வீட்டில் நீங்கள் புதிதாக பல பொருட்கள் வாங்குவீர்கள் என்று அறியலாம். அது தங்கம் இடம் வண்டிகள் என்று பலவிதமான பொருட்களை குறிக்கும். எதிர்கால தொடர்பான செயலில் முன்னேற்றமும் லாபமும் பெருகும் புதிதாக தொழில் அல்லது வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பசுமாடு உங்களை முட்டுவது போல் கனவு கண்டால்:

வாகனத்தில் பயணிக்கின்ற போது மற்றும் வாகனத்தில் செல்லும் போது மிக கவனமாக செல்லுங்கள் என்று குறிக்கும் .பசுமாடுகள் உங்களை விரட்டுவது போல் கனவு கண்டால் உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமங்கள் ஏற்படும்.

பசுவுக்கு நீங்கள் உணவு கொடுப்பது போல் கனவு கண்டால்:

நீங்கள் விரும்பியது கிடைக்கும் மற்றும் எதிர்பார்த்த காரியங்கள் செயல்கள் நடைபெறும். வாழ்க்கையில் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். பசு மாட கூட பேசுவது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகளை குறிக்கிறது.

பசுமாடு அடிப்பட்டு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால்:

தொழில் தொடர்பான செயல்களில் மிக கவனம் வைத்து ஈடுபட வேண்டும் என்று குறிக்கிறது.பசுவை வெட்டுவது போல் கனவு கண்டால் எதிர்கால செயல்களில் அல்லது பணிகள் செயல்பட போது மிக கவனம் வேண்டும். பசுமாடுகள் கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் எதிர்கால செயல்களில் கவனமும் குறிக்கும்.

 பசுக்களிடம் இருந்து பால் கறப்பது போல் கனவு கண்டால்:

உடல்நலம் சரியில்லாமல் இருந்தால் உடல் நலம் பெறும் மற்றும் பல நாள் கருத்தரிக்காத பெண் கருத்தரிப்பால் என்று குறிக்கிறது. பசுக்கள் சாணி போடுவது போல் கனவு கண்டால் இது ஒரு கெட்ட கனவு காண்பவர்கள் வறுமையில் வாடுவார்கள் என்று அறியலாம்.

பசுமாடு கன்று போடுவது போல் கனவு கண்டால்:

வீட்டின் செல்வம் பெருகும் உங்கள் வாழ்க்கையில் நீங்க முன்னேற்ற அடையாளம் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் மற்றும் வேலைகளில் மேலும் பதவி உயரும். உங்கள் குழந்தைகள் படிப்பில் வளர்ச்சி உண்டாக்கும். புதிதாக பிறந்த கன்னுக்குட்டியை கனவில் கண்டால் உங்கள் குழந்தைகள் மூலம் நன்மை பெருமையும் கிடைக்கும்.

பசுமாடுகள் பசுமையான வயலில் இருப்பது போல் கனவு கண்டால்:

உங்கள் பணத்தட்டுப்பாடு நீங்கும் செல்வமும் பெருகும் உங்கள் வாழ்க்கையும் ஆரோக்கியமும் நிம்மதியும் உண்டாக்கும் மற்றும் புதிய நண்பர்களும் அனுபவங்கள் உண்டாக்கும். பசுமாடுகள் பயிரை மேய்வது போல் கனவு கண்டால் எதிர்கால செயல்களில் முன்னேற்றம் அடையலாம்.

பசுமாடு வீட்டு வாசலில் முன்பே நிற்பது போல் கனவு கண்டால்:

சுப காரியங்களில் சில அலச்சன்கள் உண்டாக்கும். சுப காரியங்களில் ஈடுபட்டால் சிறிது கவனம் தேவை.பசுமாடுகள் வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்.

பசு மாட்டின் கண்ணில் இருந்து கண்ணீர் வருவது போல் கனவு கண்டால்:

வீட்டில் இருக்கும் பெண்களிடம் மணமிட்டு பேசுதல் நல்லது மற்றும் எந்த காரியத்தையும் மறைக்காமல் சொல்லி விடுவதே நல்லது. அவர்களிடம் சிறிது நேரங்கள் ஒதுக்கி மகிழ்ச்சியை உண்டாக்குங்கள்.

கனவில் பசுமாடை ஏதோ ஒரு விலங்கு தாக்குவது போல் கனவு கண்டால்:

நண்பர்களின் மூலம் புதிதாக இருந்து வந்த முயற்சிகள் தடை நீங்கும் மற்றும் நண்பர்களின் மூலம் உதவிகளும் நம்பிக்கையும் கிடைக்கும்.

Leave a Comment