சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன் | Sumangalip pen kanavil vanthaal enna palan in tamil:
இரவில் உறக்கத்தில் மனிதனுக்கு பலவிதமான கனவுகள் வரும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான கனவு அர்த்த பலன்கள் உள்ளன. கனவு சாஸ்திரம் மூலம் கனவில் சுமங்கலி பெண் வந்தால் அது வீட்டுக்கு நன்மை தருமா இல்ல தீமை தருமா என்று நாம் இதில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சுமங்கலிப் பெண் கனவில் வந்தால்:
சுமங்கலி பெண் கனவில் தோன்றினாள் நம் வீட்டிற்கு ஏதோ ஒரு வழியில் செல்வ லாபங்கள் வரப்போகுது என்று அர்த்தத்தை குறிக்கிறது.
சுமங்கலி பெண்கள் கனவின் சாஸ்திர பலன்கள்:
சுமங்கலி பெண் கனவில் வந்தால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணமோ சொத்தோ தனிப்பட்டையில் இருக்கும் செல்வங்கள் மற்றும் வேலை அல்லது தொழிலில் இருந்து லாபங்கள் பெருகும் இந்த மாதிரி செல்வங்கள் வரப்போகுது என்று கனவுகளின் மூலம் அறிவுறுத்துகிறது.
உங்களை தேடி சுபச் செய்திகள் வரும் புதிய சொத்து வாங்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் பதிவு உயர்வு வாய்ப்புகளும் கிடைக்கும் மேலும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
மஞ்சள் மற்றும் குங்குமத்துடன் பெண்கள் கனவில் வந்தால்:
மஞ்சள் மற்றும் குங்குமம் அணிந்து பெண்கள் கனவில் வந்தால் நீங்கள் பல ஜென்மங்கள் செய்த பாவங்கள் விலகி வீட்டில் மகிழ்ச்சி பெருகும் மற்றும் செல்வங்களும் பெருகும் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
அழகான சுமங்கலி பெண் கனவில் வந்தால்:
கனவில் அழகான சிரித்த முகத்துடன் பெண் கனவில் தோன்றினாள் சுபம் உண்டாகும் என்று அர்த்தம். மேலும் உங்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு லாபம் ஏற்படும் மற்றும் உங்கள் வீட்டில் திருமணம் அல்லது குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் நடைபெறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி மங்களகரமான செயல்கள் நடைபெறும் என்று அறியலாம்.

மங்களப் பொருட்களுடன் சுமங்கலி பெண் உங்கள் வீட்டுக்கு வருவது போல் கனவு கண்டால்:
சுமங்கலி பெண் வீட்டில் வந்து விளக்கு ஏற்றுவது அல்லது உங்க வீட்டுக்கு ஏதோ பொருட்கள் கொண்டு வருவது போல் நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு திருமணம் நடைபெறும் அல்லது அந்த வீட்டில் உள்ள பெண் பருவமடைவார்.
பொதுவாக பெண்கள் என்றால் தேவதை கடவுள் குறிக்கும் அவர்களை மதித்து மகிழ்ச்சியாகவும் நீங்கள் வைத்திருந்தால். அவர்களின் ஆசீர்வாதம் மற்றும் லட்சுமி கடவுளின் ஆசீர்வாதமும் உங்கள் வீட்டில் பெறுவீர்கள்.
ஒரு பெண் உங்களை நோக்கி வருவது போல் கனவு கண்டால்:
தன லாபம் உண்டாகும் மேலும் லட்சுமி கடாய்சம் ஏற்படுத்தும் என்று அர்த்தம்.