இறந்த அப்பா கனவில் வந்தால் என்ன பலன்

இறந்த தந்தை கனவில் வந்தால் என்ன பலன் | irantha appa kanavil vanthaal enna palan in tamil

இரவில் தூங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்றுதான். இரவில் பலவிதமான கனவுகள் காணுவோம். அதில் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் பலன்கள் உள்ளன. தூக்கத்தில் இறந்து போன தந்தை கனவில் வந்தால் அது நல்லது நடக்கப் போவதை குறிக்குதா இல்ல ஏதோ ஒரு கெட்டதே நடக்கப் போவது குறிக்கிதா என்று நாம் இதில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இறந்த தந்தை கனவில் வந்தால் என்ன பலன்:

இறந்த அப்பா அடிக்கடி கனவில் வந்து அவர் அழுவது சிரிப்பது அல்லது ஏதோ பேசுறாரு ஒரு சில நேரத்தில் கனவில் வந்து பேசாம கூட போயிடுறார். இந்த மாதிரி கனவில் பலவித விஷயங்கள் நடக்கும் இதுக்கெல்லாம் என்ன அர்த்த பலன் என்று இதில் தெளிவாக பார்க்கலாம்.

தந்தை கனவில் வந்து அழுவது போல் கனவு கண்டால்:

இதற்கு அவர் வருத்தமாக இருக்கிறார் என்று குறிக்கிறது. நீங்கள் வந்து ஏதோ ஒரு புதிய செயல்கள் தொடங்குறீர்கள் அது தொழில் அல்லது ஏதோ புதிய நபர்களுடன் இணைந்து தொழில் அல்லது வேலை தொடங்குவது. அவர்களின் மூலம் உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனைகள் வரப்போகிறது என்று முன் எச்சரிக்கையாக கனவில் வந்து வருத்தத்துடன் அறிவுறுத்துகிறார்.

தந்தையிடம் பேசுவது போல் கனவு கண்டால் :

நீங்கள் ஏதோ ஒரு விஷயங்களை நினைச்சு குழப்பம் அடைந்து இருப்பீர்கள் அதற்கு கனவில் வந்து தந்தை உங்களுக்கு உதவுகிறார் இரவில் கனவில் தந்தை பேசுவது போல் கனவு வந்தால் அது நல்ல கனவு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய போகிறேன் மற்றும் உங்கள் உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு என்று அறிகுறிக்கிறார்.

இந்த மாதிரி கனவுகள் வந்தால் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற போகுது அதாவது உங்கள் வீட்டில் திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் இந்த மாதிரி பல சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்று அறிவுறுத்துகிறது.

இறந்த தந்தையை கனவில் நீங்கள் தேடுவது போல் கனவு கண்டால்:

நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் அதற்கான பிரச்சினைகளை சரி செய்யவும் எந்தவிதமும் குழப்பமும் அடையாதீர்கள் என்று இந்த கனவு மூலம் அறிவுறுத்துகிறார்கள்.

இறந்த தந்தை உங்கள் வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால்:

இறந்த தந்தை உங்கள் வீட்டில் சாப்பிடுவது அல்லது வீட்டில் உறங்குவது அல்லது நடமாடுவது போல் இருக்கிற மாதிரி கனவு கண்டால் உங்கள் ஆயுள் நீண்ட காலம் நீங்கள் இருப்பீர்கள் மற்றும் அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் அவர்கள் உங்களிடமே பாதுகாப்பாக இருப்பார்கள் என்று அறிவுறுத்துகிறது.

இறந்த தந்தை உங்களிடம் வந்து பேசாமல் அப்படியே போகிறார் போல் கனவு கண்டால்:

இறந்த தந்தை கனவில் வந்து கோபமாக பேசாமல் போய்விட்டால்.இந்த மாதிரி கனவு கண்டால் நீங்கள் ஏதோ தவறு செய்தீர்கள் அல்லது நீங்கள் ஏதோ ஒரு தப்பான பாதையில் போறீர்கள் தப்பான பாதையில் போக வேண்டாம் என்று கனவு மூலமாக வந்து அறிவுறுத்துகிறார்.

இறந்த தந்தை உடலை பார்ப்பது போல் கனவு கண்டால்:

உங்கள் நெருங்கிய உறவினர்களின் வரவிருக்க சண்டையை பற்றி உணர்த்துகிறது இதற்கு நீங்கள் யாரையும் நம்பாதீர்கள் என்று தந்தை வந்து அறிவுறுத்துகிறார்.

இறந்த தந்தை மீண்டும் உயிரோடு வீட்டுக்கு வருவது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு வரவேற்கும் அதிர்ஷ்டத்தை காலங்கள் கூடிய சீக்கிரத்தில் வரப்போகிறது என்று குறிக்கிறது.நீங்கள் செய்து முடிக்கும் வேலை அல்லது தொழிலில் வெற்றி கிடைக்கும் மற்றும் உங்கள் செல்வம் பெருகும்.

இறந்த தந்தையின் ஆன்மீக நம்பிக்கை பலன்கள்:

இதுவரை உங்கள் இறந்த தந்தை என்ன பலன் என்று அறிந்தீர்கள். உங்கள் குடும்பத்துக்கு தூணாக இருந்து அந்த குடும்பத்தை வழிநடத்திய தந்தை கனவில் வந்தால் பழங்காலமாக இருந்து வந்த பிரச்சனைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று அர்த்தம்.

இதுவே தாயும் தந்தையும் இருவரும் சேர்ந்து கனவில் வந்தால் அவர்களின் முழுமையான ஆசீர்வாதம் நமக்கு உண்டு என்று நம்பிக்கை பலன் அர்த்தம்.

இதுவே அழுதுகொண்டு அல்லது சோகமாக வந்தால் அவர்களின் ஆத்மா சாந்தி அடையவில்லை ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது என்று முன்கூட்டியே அறிகுறித்துகிறது.

Leave a Comment