பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் | paambu kanavil vanthaal enna palan in tamil :
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இரவில் பலவிதமான கனவுகள் வரும் அதேபோல் நம் காணும் கனவுகளுக்கு பலன்கள் நம்பிக்கையும் உண்டு நீண்ட காலமாக வருகிறது . கனவில் பாம்பு வந்தால் அது நல்லதா இல்லை கெட்டதா நாம் இதில் தெரிந்து கொள்ளலாம்.பாம்புகளின் பல வகைகள் உண்டு ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்த பலன்களும் உள்ளன என்று நாம் இதில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பாம்பு கனவில் வந்தால்:
நீங்கள் குலதெய்வம் கோயில்கள் பல நாட்களாக செல்லாமல் இருந்தால் கூட உங்கள் குலதெய்வம் பாம்பு வடிவத்தில் வந்து உங்களுக்கு இந்த மாதிரி கனவில் அடிக்கடி வந்து உணர்த்தும். நீங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று அந்தப் பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டும்.
பாம்பு உங்களை தொரத்துவது போல் கனவு கண்டால்:
அது நல்லதல்ல அது ஒரு கெட்ட கனவு நீங்களும் செய்யும் செயல்களில் மிகக் கவனம் வைத்து செயல்படுவது நல்லது என்று குறிக்கிறது.
பாம்பு உங்களை தேடி வந்து கடிப்பது போல் கனவு கண்டால்:
உங்களுக்கு இருந்த கஷ்டங்கள் உங்களிடம் இருந்து நீங்கும் நெடுங்காலமாக தீராத கடன் இருந்தால் உடனடியாகவே கடன் தீரும் மற்றும் தன லாபம் உண்டாகும். துன்பங்கள் தீரும் உங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் விலகி சுபிட்சகம் உண்டாகும்.
பொதுவாக பாம்பு உங்களை துரத்துவது போல் கனவு கண்டால் உங்களுக்கு வறுமை வரப்போகுது என்று முன்கூட்டியே குறைக்கிறது.
கருப்பு பாம்பு கனவில் கண்டால்:
கருப்பு நிறம் கொண்ட பாம்பு கனவில் வந்தால் கவனம் வைத்து செயல்பட வேண்டும். வரப்போற பிரச்சனைகளை முன்கூட்டியே அறிவுறுத்துகிறது என்று அறியலாம்.
பச்சை மற்றும் வெள்ளை நிறை கொண்ட பாம்பு கனவில் வந்தால்:
இது ஒரு நல்ல சகுனம் உங்க வாழ்க்கையில் ஆரோக்கியம் மற்றும் செழிப்பு வரப்போகுது என்று அர்த்தம். வெள்ளைப் பாம்பு கனவில் வந்தால் மன அமைதி உங்கள் வாழ்க்கையில் நிம்மதியை வரப்போற அதிர்ஷ்டத்தை குறிக்கிறது.
பாம்பு உங்கள் காலில் சுற்றிக்கொண்டுவதும் மற்றும் சுற்றி வருவது போல் கனவு கண்டால்:
உங்களுக்கு சனி பிடிக்க போகிறது என்று குறிக்குது அதேபோல் பாம்பு உங்களை கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் உங்களுக்கு பிடித்திருந்த சனி நீங்கி விட்டது என்று அர்த்தம்.
கனவில் பாம்பு விஷத்தை கக்குவது போல் கனவு கண்டால்:
உங்கள் வேலை இடத்தில் அல்லது தொழில் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும் லாபம் பெருகும் என்று குறிக்கிறது மற்றும் பாம்பு சீறுவது போல் கனவு கண்டால் நீங்கள் செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும் என்று குறிக்கிறது.

பாம்பு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால்:
துக்க செய்திகள் நம்மளை தேடி வரும் என்று குறிக்கிறது மற்றும் பாம்பு உங்களை பார்த்து ஓடிவிட்டது பார்த்தால் தங்களுக்கு வர வேண்டி இருந்த ஆபத்துக்கள் நீங்கி விட்டது
பாம்பு உங்கள் முன் படம் எடுத்து ஆடுவது போல் கனவு கண்டால்:
வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பாம்பு உங்கள் வீட்டில் வந்து தரையில் கொத்தினால் போல் கனவு கண்டால் உங்கள் திருஷ்டிகள் கலைந்து அதிர்ஷ்டம் உண்டாக்கும். உங்களை துரத்துவது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை என்று குறிக்கிறது.
பாம்பை கொல்வது போல் கனவு கண்டால்:
விரோதிகள் ஏற்பட்ட அனைத்து தொல்லைகளும் விலகும் என்று குறிக்கிறது.
பாம்பு உங்கள் மீது ஏறி செல்வது போல் கனவு கண்டால்:
நீங்கள் செய்யும் தொழில் அல்லது வேலையில் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகுது என்று அர்த்தம்.
வீட்டில் பாம்பு வளர்ப்பது போல் கனவு கண்டால்:
உறவினர்கள் மூலம் ஏதோ ஒரு பிரச்சனைகள் வரப்போவது என்று குறிக்கிறது அதுமட்டுமில்லாமல் உங்கள் தலையில் பாம்பு அமர்ந்து போல் கனவு கண்டால் மாற்றமான சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும் அதை நீங்கள் தெளிவாக பயன்படுத்தினால் வெற்றி கிடைக்கும்.
பாம்பு பால் குடிப்பது போல் கனவு கண்டால்:
உங்கள் வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும் மற்றும் உங்கள் உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும் என்று குறிக்கிறது.
மலைப்பாம்பு உங்களை சுற்றிக்கொண்டு முழுங்குவது போல் கனவு கண்டால்:
உங்களுக்கு வரவேண்டிய பெரிய ஆபத்துக்கள் நீங்கி விட்டது என்று அர்த்தம்.பொதுவாக மலைப் பாம்பை பார்த்தால் நம்மளை பிடித்திருந்த தரித்திரம் மற்றும் தொல்லைகள் அனைத்தும் விலகிவிடும் என்று குறிக்கிறது.
இரட்டைப் பாம்பு கனவில் கண்டால்:
உங்களுக்கு பல நன்மைகள் உண்டாகப் போகிறது என்று குறிக்கிறது மற்றும் வேலை அல்லது தொழிலில் முன்னேற்றம் அடைந்து லாபத்தை பெருக்கலாம்.