நிறைய பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் | Niraiya paambu kanavil vanthaal enna palan in tamil.
பாம்பு கனவில் வந்து இருந்தால் ஒருவருக்கு என்ன நடக்கப் போகும் என்று முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.மனிதனாக பிறந்த அனைவருக்கும் கனவு வரது இயல்பான ஒன்றுதான். இரவில் பலவிதமான கனவுகள் வரும் ஒவ்வொரு கனவுக்கும் பல விதமான அர்த்த பலன்கள் உள்ளன.தூக்கத்தில் நிறைய பாம்பு கனவில் வந்தால். அது நல்ல கணவா இல்ல கெட்ட கனவா என்று நாம் இதில் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக கனவில் பாம்பு வந்தால் அது சிக்கலான ஒன்றுதான்.
நிறைய பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் :
இரவில் உறக்கத்தில் நிறைய பாம்பு கனவில் வந்தால் நீங்கள் குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டிருந்தால் கூட உங்கள் கனவில் குலதெய்வம் பாம்பு வடிவத்தில் வந்து தன்னை வழிபடுமாறு உணர்த்தும்.
அந்தப் பிரார்த்தனையை உங்கள் குடும்பத்துடன் சென்று உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.அந்தக் வழிபாடு காரியத்தை நீங்க செய்யாமல் விட்டால் உங்களுக்கு பல கஷ்டங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.
பாம்பு கனவில் வந்து உங்களை கடிப்பது போல் கனவு கண்டால்:
பாம்பு கனவில் உங்களை கடிப்பது போல் கனவு கண்டால் உங்கள் தீராத கடன் தொல்லை பிரச்சனை பாம்பு நம்மளை கனவில் வந்து கடிப்பது நம்மளோட தீராத கடன் கொடு தீரும் ஏனென்றால் நம்மளை பிடித்த கஷ்டங்கள் நீங்கி லாபத்தை கொண்டு வரும்.
நிறைய பாம்பு உங்கள் காலை பின்னி கொண்டு இருப்பது போல் கனவு கண்டால்:
உங்களுக்கு சனி தோஷம் ஆரம்பிக்கப் போகுது என்று அர்த்தம். எந்த வேலையிலும் மற்றும் செயல்களையும் ஈடுபடும் போது கவனம் வைத்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
நிறைய பாம்பு உங்களை விரட்டுவது போல் கனவு கண்டால்:
தீராத வறுமை ஏற்படப்போவது என்று அர்த்தம். நீங்கள் செலவு பண்ணும்போது கிச்சனமாக செலவழித்தால் நல்லது.

பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால்:
நாகப் பாம்பு நீங்கள் அடிச்சு கொல்வது போல் கனவு கண்டால் விரோதியால் ஏற்பட்ட நாள்பட்ட தொல்லையெல்லாம் தீர போவது என்று அர்த்தம்.
பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால்:
உங்களைப் பிடித்த சனி நீங்கிருச்சு என்று அர்த்தம். உங்களை பிடித்த தொல்லைகள் எல்லாம் விலகி விட்டது என்று பொருள் ஆகும்.
பாம்பு வீட்டுக்குள் வந்துட்டு வெளியே போற மாதிரி கனவு கண்டால்:
குலதெய்வ பிரார்த்தனையை இதுவரைக்கும் நிறைவேற்றாமல் நீங்க இருந்திருந்தால் நீங்கள் குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும் என்று கனவு முலையுமா வந்து அறிகுறி வலியுறுத்துகிறது.
பாம்பு உங்கள் மேல் ஏறி போவது போல் கனவு கண்டால்:
அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்று அர்த்தம். நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்து கொண்டிருந்தால் உங்கள் லாபம் பெருகும் மற்றும் தொழில் வளர்ச்சி அடையும்.
பாம்பு கனவில் வந்து உங்கள் வீட்டு முன் தரையில் கொத்துவது போல் கனவு கண்டால்:
உங்களை பிடித்திருந்த தோசம் திருஷ்டி இதெல்லாம் விலகி ஐஸ்வரியம் சேரப்போகுது என்று அர்த்தம். உங்கள் கெட்ட எண்ணங்கள் எல்லாம் விலகி வாழ்க்கையில் நல்ல குணத்தோடையும் ஆரோக்கியத்தோடையும் வாழ்வீர்கள் என்று கருதப்படுகிறது.

நல்ல பாம்பு உங்களை படம் எடுப்பது போல் கனவு கண்டால்:
உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்பட போகின்றது என்று அர்த்தம் மற்றும் வாழ்க்கையில் வெற்றிகள் மற்றும் நன்மைகள் நடக்க போவது என்று அர்த்தம்.
இரண்டு பாம்பு ஒன்றாய் இருப்பது போல் கனவு கண்டால்:
அதாவது கனவில் இரண்டு பாம்பு ஒன்றாக இணைந்து நடனம் ஆடுவது போல் கனவு கண்டால் செல்வம் அதிகமாக வரப்போகுது என்ற அர்த்தம் மற்றும் இரட்டை பாம்பு கனவில் கண்டால் திருமணம் வாய்ப்பு வரும் என்று அர்த்தம்.
பச்சை பாம்பு செடிகளோடு இருப்பது போல் கனவு கண்டால்:
குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷம் இருக்காது வரப் போற பிரச்சனைகளை குறிக்கிறது. உங்கள் உடல் நலத்தை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.
மலைப்பாம்பு உங்களை சுற்றி முழுங்குவது போல் கனவு வந்தால்:
உங்களுக்கு வரவேயிருந்த பெரிய பிரச்சனைகள் ஏதோ ஒன்று விலகிருச்சு என்று அர்த்தம். ஒரு செயலில் செய்யும்போது முடியும் கவனமாக வைத்து செயல்படுமாறு என்று அறிவுறுத்துகிறது.
நல்ல பாம்பை கனவில் வந்தால்:
விரோதிகள் ஏற்பட்ட தொல்லைகள் நமக்கு வரப்போகிறது என்று முன்கூட்டியே எச்சரிக்கை அறிவுறுத்துகிறது. நல்ல பாம்பு கனவில் இறந்து கிடப்பது போல் கனவு வந்தால் துக்கு செய்தி நம்மை நாடி வர போது என்று அர்த்தம்.
நல்ல பாம்பு உங்களை பார்த்து பயந்து ஓடுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு வரவேண்டிய விலகிருச்சு என்று அர்த்தம்.
பாம்பு கனவின் முழுமையான பலன்கள்:
- கனவில் பாம்பு வந்தால் பயப்படத் தேவையில்லை. அக்கனவில் எந்த மாதிரி பாம்புகள் வருது மற்றும் எந்த மாதிரி உணர்வு செயல்களை படமாக காட்டுது என்று அதற்கு பலன்கள் உண்டு. கனவு என்றால் அது ஒரு முன்னெச்சரிக்கையின் சாஸ்திர பலன்கள்.
- பாம்பு நம்ம கனவில் வந்து கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மளை விட்டு விலகப் போவது என்று அர்த்தம் மற்றும் உங்கள் வீட்டு குழந்தைகள் கூட திருமணம் நடைபெறும் என்று அறிகுறி.