இறந்தவர்கள் கனவில் வந்து பேசினால் என்ன பலன் | Iranththavargal kanavil vanthu paesinaal enna palan in tamil.
இறந்தவர்கள் கனவில் வந்தால் அது நல்ல சகுனமா இல்ல கெட்ட சகுனமா என்ன நடக்க போகுது என்று உங்களுக்கு தெரியுமா. பொதுவாக மனிதனின் வாழ்க்கையில் இரவில் உறக்கத்தில் பலவிதமான கனவுகள் வரும். ஒவ்வொரு கனவுக்கும் பலவிதமான அர்த்த பலன்கள் உள்ளன. எந்த மாதிரி கனவுக்கு என்ன அர்த்தம் என்று நாம் இதிலில் தெளிவாக படித்து தெரிந்து கொள்ளலாம் .
இறந்தவர்கள் கனவில் வரலாமா:
அது நம்ம தாத்தா பாட்டி தந்தை தாய் நண்பர்கள் அல்லது நமக்கு தெரிஞ்சவங்க தெரியாதவர்கள் இறந்தவர்கள் கனவுல எப்படி எல்லாம் வரலாம்? எப்படி எல்லாம் வரக்கூடாது என்று ஒவ்வொண்ணாவும் தெளிவாக பார்க்கலாம். கனவில் இறந்தவர்கள் வந்து பேசினால் அவர்கள் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து கூறுவார்கள்.
இறந்தவர்கள் கனவில் வந்து அழுதால்:
அது நம் முன்னோர்களாக இருந்து கனவில் வந்து அழுதால் அவர்களுக்கு செய்ய வேண்டிய திதிமுறைகளை செய்ய வேண்டும். அது நம் தாத்தா பாட்டி தாய் தந்தை அவர்கள் கனவில் வந்து அழுவும் கூடாது சோகமாகவும் இருக்கக் கூடாது. அவர்கள் அழுவுற மாதிரி கனவு கண்டால் நமக்கு வர பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து நம்மிடம் கூறுகிறார் என்று அர்த்தம்.
நமக்கு வேண்டப்பட்டவர் இறந்தவர்கள் கனவில் வந்தால்:
அவர்கள் நம் உறவினர்கள் அல்லது நண்பர்களாக இருந்தால் கூட அவர்கள் கனவில் வந்தால் நீங்கள் ஆபத்திலிருந்து தப்பிவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்கள் ஆயுள் விருத்தி அடையும் மற்றும் உயிரோடு இருக்கிறவர்கள் இறந்தது போல் கனவு கண்டால் அவர்கள் ஆயுள் கூடும்.
இறந்து போன தாய் தந்தை கனவில் வந்து பேசினால்:
அவர்கள் கனவில் வந்தால் ஆபத்தை எச்சரிக்கிறார் என்று அர்த்தம். தாய் தந்தை கனவில் வந்தால் அவர்கள் நம் கூட எப்போதும் பாதுகாவலராகவே இருப்பார்கள். அவர்களின் அன்பு பாதுகாப்பு நம் குழந்தைகளுக்கும் நமக்கும் இருக்கும்.
இயற்கை மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால்:
இயற்கை மரணம் என்றால் வயசாயி பேரன் பேத்தி எடுத்து மற்றும் குடும்பத்துடன் இருந்து அவர்கள் இருந்தால் அது இயற்கை மரணம் என்று கூறப்படும். இவர்கள் கனவில் வந்தால் நல்ல சகுனம் எந்த வகையான பிரச்சனைகளும் இல்லை.

தூர் மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்து பேசினால்:
தூர் மரணம் என்றால் அவர்களாகவே தற்கொலை செய்கிறது அல்லது அல்பாயிசத்தில் இறந்தவர்கள். இந்த மாதிரி இறந்தவர்கள் கனவில் வந்தால் ஆபத்தை குறிக்கிறது அது நமக்கு விபத்து சண்டை பிரச்சினைகளை வரும் என்று குறிக்கிறது இதற்கு தெய்வ வழிபாடு செய்தால் நன்மை ஏற்படும்.
இறந்தவர்கள் உங்களிடம் மகிழ்ச்சியாக பேசுவது போல் கனவு கண்டால்:
உங்கள் கஷ்ட காலங்களில் உங்களுக்கு உதவ உங்கள் முன்னோர்களும் மற்றும் அதற்கான நல்ல மனிதர்கள் வருவார்கள் மற்றும் பேரும் புகழும் உண்டாகும் உங்கள் மதிப்பும் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் உங்கள் வீட்டில் உறங்குவது போல் கனவு கண்டால்:
உங்களுக்கு ஆபத்து இல்லை நீங்கள் கண்டத்திலிருந்து தப்பி விட்டீர்கள் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் உங்கள் பெயரை சொல்லி கூப்பிடுவது போல் கனவு கண்டால்:
உங்கள் கனவில் அடிக்கடி உங்கள் பெயரை சொல்லி கூப்பிடுவ போல் கனவு கண்டால் விரைவில் சுபச் செய்திகள் உங்களைத் தேடி வரும். இறந்தவர்கள் உங்களை தட்டி எழுப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு வர வேண்டிய ஆபத்து குறிக்கிறது.
இறந்தவர்கள் உங்களிடம் ஏதோ ஒரு பொருட்கள் கொடுப்பது போல் கனவு கண்டால்:
அதாவது இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்து பூ பழங்கள் அல்லது ஏதோ ஒரு பொருட்கள் கொடுப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் சுப காரியம் நடக்கும் உங்கள் வீட்டில் லாபம் பெருகும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் மேலும் வேலை இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
இறந்தவர்கள் கனவில் வந்து உங்களை கூப்பிடுகிறார் அல்லது அழைக்கிறது போல் கனவு கண்டால்:
இறந்தவர்கள் கனவில் வந்து உங்களிடம் பேசி அழைப்பது போல் கனவு கண்டால். இறந்த உறவினர்களுக்கு நீங்கள் திதி கொடுக்காமல் கூட இருந்தால் இந்த மாதிரி கனவு மூலம் உணர்த்தும். உங்கள் பிரச்சினைகளே சரி செய்து வாழ அறிவுறுத்திகிறார்கள் என்ற அர்த்தம்.
இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்து சோகம் அல்லது கோபப்படுவது போல் கனவு கண்டால்:
இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நீங்கள் செய்யாமல் இருந்தால். அப்படி செய்யாமல் விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களில் தடங்கங்கள் மற்றும் மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இறந்தவர்களின் முழுமையான நம்பிக்கை பலன்கள்:
இறந்தவர்கள் என்றால் நம் முன்னோர்கள் மற்றும் நம் தெய்வங்கள் ஆவார்கள். நம் தாய் தந்தை மற்றும் தாத்தா பாட்டி இருப்பார்கள். அவர்களின் அன்பும் ஆசீர்வாதம் நம்மிடம் எப்போதும் இருக்கும் என்று அர்த்தம். பொதுவாக இறந்தவர்கள் நம் குழந்தை போல் ஆவார்கள். கனவே நினைத்து அதிகமாக பயப்பட வேண்டியது இல்லை அது ஒரு முன்னெச்சரிக்கையின் அறிகுறியாகும்.