குறி சொல்லும் பெண் கனவில் வந்தால் என்ன பலன் | kuri sollum pen kanavil vanthaal enna palan in tamil
கனவில் பலவிதமான மனிதர்கள் தோன்றலாம். ஆனால் குறி சொல்லும் பெண் கனவில் கண்டால் அது நல்ல கனவு அறிகுறியா இல்ல கெட்ட கனவு அறிகுறியா என்ன நடக்க போகுது என்று உங்களுக்கு தெரியுமா. கனவு என்பது நடக்கப்போவது முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது. எந்த மாதிரி அறிகுறி என்று நாம் இதில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
குறி சொல்லும் பெண் கனவில் வந்தால் நல்ல செய்தியின் அறிகுறி:
குறி சொல்லும் பெண் கனவில் மகிழ்ச்சி முகத்துடன் பேசுவதை கனவில் தோன்றினாள் அது நல்ல செய்தியின் அறிகுறி. விரைவில் தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் மற்றும் உடல்நலத்துடன் ஆரோக்கியமாகவும் வாழ்வோம். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
கோபமாகவும் குறி சொல்வது போல் கனவு கண்டால்:
குறி சொல்ற ஆணும் பெண்ணும் கோவமாக பேசுவதை போல் கனவில் கண்டால் நமக்கு வரப்போற பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து அவர்கள் நமக்கு எச்சரிக்கிறார்கள். நீங்கள் ஏதோ ஒரு முடிவு எடுக்கிறீர்கள் என்றால் அதில் கவனமாக வைத்து செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
மறைந்திருக்கும் உண்மைகளை குறி சொல்லும் பெண்களின் மூலம் தெரிந்துகொள்ள முடியும் பலன்கள்:
கனவில் குறி சொல்லும் பெண் எச்சரிக்கிறது போல் தோன்றினாள். நமக்கு வரவேண்டிய நல்ல விஷயங்களும் மற்றும் கெட்ட விஷயங்களும் முன்கூட்டியே அவர்கள் அறிந்து நம்மிடம் இரவில் நம் வீட்டில் முன்பு குறி சொல்லுவார்கள் . அப்பொழுது அவர்கள் கூறும் வார்த்தைகளை மட்டும்தான் கேக்கணும். அவர்களை நேரில் சென்று இரவில் பார்க்கக் கூடாது. ஏனென்றால் அவர்களிடம் பின்பு தூய சக்திகள் இருக்குது என்று ஆன்மீக நம்பிக்கை கூறுகிறது.

கனவில் குறி சொல்லும் பெண் நம் கஷ்டத்தை பற்றி கூறுவது போல் கனவு கண்டால்:
சில நேரங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்போம். அப்பொழுது குறி சொல்லும் பெண் கனவில் கண்டால் அவர்கள் கூறும் நல்ல வார்த்தைகளை மூலம் நாம் புதிய முயற்சிகளில் மற்றும் காரியங்களில் ஈடுபடுவோம் மற்றும் ஆர்வத்தின் நாம் காட்டுவோம். ஏனென்றால் நமக்கு இருக்கும் கஷ்டங்களும் பற்றி யோசிக்காமலும் பயப்படாமலும் மேலும் புதிய தொழில் அல்லது வேலையில் ஈடுபடுவோம்.
கனவு மூலம் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்க போகுது என்று அறியும் பலன்கள்:
பொதுவாக குறி சொல்லும் பெண்கள் அவர்கள் இறைவனிடம் அருள் பெற்று வார்த்தைகளை குறிகள் மூலம் கூறுவார்கள் அவர்கள் சொல்லும் நல்ல வார்த்தை என்றால் குடும்ப பொருளாதாரம் லாபத்தில் முன்னேற்றம் அடையும் மற்றும் குடும்பத்தின் சுப காரியம் உண்டாகும்.
நமக்கு செய்வினை யார் வைத்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்:
ஒரு சில நேரத்தில் தீய வார்த்தைகளும் கூறுவார்கள் அது நமக்கு யாரோ ஒருத்தர் செய்வினை வைத்திருப்பார்கள் அவர்களைப் பற்றி நம்மிடம் கனவில் வந்து குறி சொல்லும் பெண்ணின் மூலம் நமக்கு யார் வைத்திருப்பார்கள் என்று அறிவுறுத்துவார்கள் மேலும் அவர்களிடமிருந்து எச்சரிக்கை படுத்துவார்கள்.
குறி சொல்லும் பெண்ணின் முழுமையான நம்பிக்கை மற்றும் ஆன்மீகப் பலன்கள்:
குறி சொல்லும் பெண்கள் கனவில் வருவது அது ஒரு இயல்பான ஒன்றுதான். அவர்கள் நமக்கு நடக்கப் போற புதிய மாற்றங்கள் தகவல்கள் பற்றி அறிந்து கூறுவார்கள். மற்றும் மிகப்பெரிய பிரச்சனைகள் வரபோது என்றால் அது அறிந்து நமக்கு எச்சரிப்பார்கள். இதையெல்லாம் இதெல்லாம் ஒரு பாரம்பரிய நம்பிக்கையா மட்டும்தான்.